Amma Memorimal

சென்னை மெரினா கடற்கரையில் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் பங்கேற்னர். இதனால், மெரினா கடற்கரை சாலை கடல் அலை போல் காட்சியளித்தது.

Amma Memorial Opening Function : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே 8, 2018 அன்று தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் முடிவுற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நூறு ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.கவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், அ.தி.மு.க எஃகு கோட்டை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா சட்ட பேரவையில் பேசியதை நினைவு கூர்ந்தார். *“வரும் சட்ட மன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர செய்வதே நமது லட்சியம் என்றும், ஜெயலலிதா ஆட்சி தொடர நாம் வீர சபதம் ஏற்போம்” என்று முதலமைச்சர் சூளுரைத்தார். முதலமைச்சரின் இந்த உரைக்கு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் கரகோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். மறைந்த முதலமைச்சரின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சிக்கு காலை முதலே மக்கள் வரத் தொடங்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே நிகழ்ச்சிக்கு வந்தனர். லட்சகணக்கான மக்கள் குவிந்த்தால் மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் வெள்ளம் கடல் என காட்சியளித்தது. மக்கள் அனைவரும் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அ.தி.மு.கவின் நிரந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நினைவிடம் என்பதால் அ.தி.மு.க தொண்டர்கள் தங்களது இதய தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். லட்சகணக்கான தொண்டர்களின் வருகை அ.தி.மு.கவிற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், அ.தி.மு.கவின் அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் ஒரிடத்தில் அவர்களது தலைவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள்: (GFX)

  1. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் 9.09 ஏக்கர் மொத்த பரப்பளவில் அமைந்துள்ளது.
  2. நினைவு மண்டபம் ஐ ஐ டி மூலம் பீனிக்ஸ் பறவையின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  3. உப்பு காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கீரிட் மேற்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
  5. அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன
  6. பக்கவாட்டுகளில் உயர்தர பளிங்கு கற்களும் தரைப் பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன
  7. நினைவிட வளாகத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது
  8. நினைவிட வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்திற்கு மேற்கூரை கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது
  9. நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது
  10. பார்வையாளர்களை கவரும் வண்ணம் நீர் தடாகங்கள் சிறந்த தோட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது
  11. நினைவிடத்தை அழகுபடுத்தும் வகையில் சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன
  12. தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனைகளின் படி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
  13. நுழைவாயிலில் மறைந்த முதல்வர் எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது
  14. நினைவிடத்தின் இரு புற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருற்கற்களால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது
  15. மின்சார வசதி, அலங்கார வண்ண மின் விளக்குகள் காண்காணிப்பு கேமிரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
  16. ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அணைய விளக்கு வைக்கப்பட்டுள்ளது
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.