Amma Memorial Opening Ceromony

எதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருவரும் இணைந்து கட்டிக்காத்து வருவதாக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Amma Memorial Opening Ceromony : தமிழகத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவி ஏற்றார். அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தொடர்ந்து தரமான ஆட்சியை வழங்கி வருகிறார்.

இதன் மூலமாக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மூன்றே மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிய திமுக வாய்பிளக்கும் வகையில் 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை அதிமுக வழங்கியுள்ளது.

மேலும் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் தீவுத்தடலில் இருந்து சென்னை மெரினா கடற்கரை வரை கூடியுள்ளனர்.

இவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு அண்ணன் ஓபிஎஸ் மற்றும் அண்ணன் இபிஎஸ் என இருவரும் இரட்டை சகோதரர்களாக இணைந்து அதிமுகவை கட்டிக்காத்து உள்ளனர்.

திமுகவை போன்று அதிமுகவில் தந்தை மகன் பேரன் ஆட்சி இல்லை. அனைத்தும் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.

கட்சியில் பதவி நியமனம், தேர்தல் கூட்டணி என எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர். எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக இணைந்தே களம் காண்கின்றனர் என உற்சாகமாக கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.