YouTube video

மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amazon Bagged Master in OTT Rights : கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

உலக அளவில் வசூலை அள்ளிய டாப் 5 படங்கள் என்னென்ன? முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?? – வசூல் விவரத்துடனான‌ லிஸ்ட் இதோ!

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு OTT நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகின்றன. ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் OTT வழியாக படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் அமேசான் ப்ரைம் செயலியை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்நிறுவனம் படங்களையும் நேரடியாக வெளியிட தொடங்கியுள்ளது.

இதுவரை பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி இருந்தாலும் முதல்முறையாக பெரிய பட்ஜெட் படமாக பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

ஜோதிகாவின் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் அமேசான் ப்ரைமில் புதியதாக இணைந்துள்ளனர்.

இதன் மூலம் அந்நிறுவனம் நல்ல லாபம் பார்த்து உள்ளது. பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக அமேசானில் ரிலீஸ் ஆக உள்ளன.

அதுமட்டுமல்லாமல் நேரடி ரிலிஸ் அல்லாத படங்களாக மாஸ்டர், ஜகமே தந்திரம் ஆகிய படங்களையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனம் இதுவரை அதிக தொகை கொடுத்து வாங்கிய தமிழ் படமாக பிகில் படம் இருந்து வந்தது. இந்த படத்தை 14 கோடிக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

மாஸ்டர், சூரரைப் போற்று படத்துக்கு விலை பேசிய அமேசான் – இத்தனை கோடிக்கு வியாபாரம்? வெளியான பரபரப்பு தகவல்கள்.!

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் மாஸ்டர் திரைப்படத்தை ரூபாய் 15 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. படம் சிறிய பட்ஜெட்டில் உருவானதால் தான் இந்த தொகைக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் கூறுகின்றன.

இனி அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகும் அஜித், விஜய், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரூபாய் 25 கோடிக்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.