Amala Paul Pair With Gautam Menon

47 வயது இயக்குனருக்கு ஜோடியாகி உள்ளார் நடிகை அமலா பால்.

Amala Paul Pair With Gautam Menon : தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய், தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்ட இவர் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெரும் பரபரப்புக்கு உள்ளானார்.

இந்த நிலையில் தற்போது இவர் குட்டி ஸ்டோரி என்ற அந்தலாஜி படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக நடித்துள்ளார்.

பாவ கதைகள் வெப் சீரிஸ் போலவே இந்த வெப் சீரிஸ் தொடரையும் விஜய், கௌதம் மேனன், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு என நான்கு இயக்குநர்கள் நான்கு பகுதிகளாக இயக்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக கௌதம் மேனன் பாவம் கதைகள் தொடரில் வான்மகள் என்ற பகுதியை இயக்கி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.