Amala Paul and Dhanush
அமலாபால் தன்னுடைய விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? என்பது பற்றி அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.

AmalaPaul About Divorce : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இவர்களின் விவாகரத்துக்கு தனுஷின் அம்மா கணக்கு படத்தில் நடித்தது தான் காரணம், என ஏ.எல் விஜயின் அப்பா அழகப்பன் பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அமலாபால் இது குறித்து பேசுகையில் விவகாரத்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, முழுக்க முழுக்க அது என்னுடைய முடிவு. தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. இது பற்றி நான் மேலும் எதுவும் பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் உங்களின் காதலனுடன் திருமணம் எப்போது என கேட்டதற்கு நான் காதலை அறிவித்த படி என்னுடைய திருமணத்தையும் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.