பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பேமஸாகி விட்டனர் நாயகன் நாயகியான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

தற்போது ஆலியா மாசனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என கேட்டதற்கு ஆரம்பத்தில் 4 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு படம் தான் ரிலீசானது. அதுவும் ஓடவில்லை.

நான் குள்ளமாக இருப்பதால் எனக்கு படங்களில் சரியான ரீச் கிடைக்கவில்லை என நினைக்கிறன், அதனால் இனி படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார். ஆனால் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.