தென்னிந்திய நடிகர்களிலேயே முதல்முறையாக அல்லு சிரீஷ் இந்தியில் சிங்கிள் சாங்க் ஒன்றில் நடித்துள்ளார்.

Allu Srinish Single in Hindi : தெலுங்கு சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு சிரீஷ். இவருடைய திறமைக்கு அடையாளம் அவருடைய கடுமையான உழைப்பு தான் காரணம். மேலும் இவர் தென்னிந்திய சினிமாவில் ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சிமா உள்ளிட்ட பல விருது விழாக்களை நடத்தியுள்ளார். அந்த விருது விழாக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

மேலும் டிக் டாக்கில் இணைந்த முதல் நடிகரும் இவர் தான். இந்தியில் மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல், நீதி மோகன் ஆகியோர் பாடிய விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையும் பெற்றவர் இவர் தான்.

மலையாள திரையுலகில் காலெடுத்து வைத்த முதல் தெலுங்கு நடிகரும் இவர் தான். 1971 ஆம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து நடித்தார்.

மேலும் அல்லு சிரீஷ் அடுத்ததாக காதல் ரொமான்டிக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.