Allu Sirish About Vijay
Allu Sirish About Vijay

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தான் எனவும் எனக்கு இந்த பாட்டு தான் பிடிக்கும் என தெலுங்கு நடிகர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Allu Sirish About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் இப்படத்தில் வில்லன்களாக நடித்து உள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

வாரி வழங்கும் வள்ளலான ரஜினிகாந்த்.. இயக்குனர் சங்கத்தை தொடர்ந்து இவர்களுக்கும் உதவி – தயாரிப்பாளர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் மிகப் பெரிய அளவில் ரீச்சாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் அல்லு சிரிஷ் லைவ் ஷாட்டில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் தமிழில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என கேட்டுள்ளார். அதற்கு அல்லு சிரிஷ் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் தான் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/VijayTrendsPage/status/1258093971026280449?s=19