AL Vijay Reveals Thalaiva Secrets

தளபதி விஜயின் மாஸான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முதன் முதலாக அஜித் தான் பார்த்தார் என இயக்குனர் பேசியுள்ளார்.

AL Vijay Reveals Thalaiva Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று தலைவா.

பல்வேறு தடைகளை சந்தித்து வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். இவர் தமிழ் சினிமாவில் கிரீடம் என்ற படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்.

கிரீடம் படத்தின் மூலமாக அஜித்திற்கும் ஏ எல் விஜய்க்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இதனால் ஏ எல் விஜய் இயக்கிய தலைவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முதன்முதலாக தல அஜித்திடம் தான் காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற வாங்கண்ணா வணக்கமண்ணா என்ற பாடலையும் அஜித் தான் முதலில் கேட்டார் என இயக்குனர் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.