முன்னணி ஹீரோவுடன் சேர்த்து படக்குழுவினர் 45 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Akshay Kumar Tested COVID19 : சீனாவில் கலந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தீவிரமாக பரவி கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது.

குறிப்பாக மகாராட்டிரம் மாநிலத்தில் அதிகபட்ச நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் திரையுலக பிரபலங்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் பணியாற்றிய படக்குழுவினர் 100 பேருக்கு பரிசோதனை செய்ததில் 45 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.