Ajith's Request to Vinoth

வலிமை படம் பார்த்த தல அஜித் அப்செட்டாகி இயக்குனர் வினோத் கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith’s Request to Vinoth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது.

படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் விருந்தாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் தல அஜித் வலிமை படத்தை பார்த்து அப்செட் ஆகியுள்ளார். கதையை மட்டுமே மையமாகக் கொண்ட படமாக வலிமை உருவாகி உள்ளது. கொஞ்சம் கூட காமெடி இல்லை, கமெர்சியலும் இல்லை. இதனால் தல அஜித் முடிந்த அளவிற்கு கமர்ஷியல் காட்சிகளை சேர்க்குமாறு அஜித்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.