Ajith's Bike Stunt in Valimai

தல அஜித்தின் பைக் ஸ்டண்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம மாஸ் காட்டி வருகிறது.

Ajith’s Bike Stunt in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கொரானா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகின்றன.

சமீபத்தில் தல அஜித் பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்தபோது விபத்தில் சிக்கி அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் தற்போது அந்த பைக் ஸ்டண்ட் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.

அஜித் ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் ரசிகர்களுக்காக துணிந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/arunaaron124/status/1332150720489869313?s=19https://twitter.com/ThalaAjith_may1/status/1332150670544158720?s=19https://twitter.com/HvinothDir/status/1332005044271542272?s=19
https://twitter.com/arunaaron124/status/1332150720489869313?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.