Ajith in School Days

தல அஜித்தின் பள்ளிப்பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ajith With Sp Saran in School Days : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகமான தோல்வி படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்றால் அது அஜித் தான்.

பல தோல்விகளை சந்தித்து இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களின் பலத்தால் இன்றுவரை அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். தல அஜித் மற்றும் பிரபல நடிகரும் பாடகருமான எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். தற்போது பள்ளி பருவ புகைப்படத்தில் தல அஜித் மற்றும் எஸ்பிபி சரண் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. அப்போது தல அஜித் மற்றும் எஸ்பிபி சரண் எப்படி இருக்கிறார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Ajith in School Days Photo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.