அஜித்..

பெற்றோர்களுடன் தல அஜித் சாமி தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பெற்றால் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் தல அஜித் பங்கேற்றுள்ளார். இப்படியான நிலையில் தல அஜித் தன்னுடைய பெற்றோர்களுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனாலும் அஜித் ரசிகர்களிடையே இப்புகைப்படம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.