Ajith Visit to Kongu Rifle Club

வலிமை சூட்டிங்கிற்கு நடிகர் அஜித் முக்கிய இடம் ஒன்றிற்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Ajith Visit to Kongu Rifle Club : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஷூட்டிங்கில் பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் பங்கேற்ற போது ஏற்பட்ட விபத்தில் அஜித்துக்கு கையில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் அவர் சூட்டிங்கை முடித்து விட்டு சென்னை திரும்பி ஓய்வில் இருந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திருப்பூரில் உள்ள Kongu Rifle Club என்ற துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ரசிகர் ஒருவருடன் இவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் லீக்காகி செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/TFCTeamPage/status/1333587009248530432?s=19