Ajith Vijay Movies Re-release Update

ஒரே நாளில் அஜித் விஜய் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith Vijay Movies Re-release Update : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவிய நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பழையபடி மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. பொங்கல் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் கொரானா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளுக்கு மக்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனை சரி செய்ய திரையரங்க உரிமையாளர்கள் பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் கூட ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் இந்த வாரம் அஜித், விஜய் படங்கள் ரிலீசாக உள்ளன.

ஆம், ஜனவரி 8ஆம் தேதி முதல் தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தையும் தளபதி விஜயின் தலைவா திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படங்களின் ரிலீஸால் மீண்டும் பழையபடி மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.