Ajith Reply to Fan Girl

எங்களை ஞாபகம் இருக்கா என கேட்டேன் ரசிகைக்கு தல அஜித் நின்று பதிலளித்து விட்டு சென்றுள்ளார்.

Ajith Reply to Fan Girl : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமாவில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க தல அஜித் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ரசிகை ஒருவர் இவரிடம் எங்களை ஞாபகம் இருக்கா என கேட்க அவருக்கு நின்று பதிலளித்து விட்டு நகர்ந்துள்ளார். குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.