Ajith Order on Valimai Release

வலிமை ரிலீஸ் குறித்து படக்குழுவினருக்கு அஜித் கண்டிஷன் ஒன்றை விடுத்துள்ளார்.

Ajith Order on Valimai Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை படத்தின் படப்பிடிப்புகள் 60% மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் படக்குழு வெளிநாட்டுக்கு படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்த நிலையில் கொரானா பரவத் தொடங்கியதால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் தல அஜித் எப்படியாவது பொங்கலுக்குள் படத்தின் சூட்டிங்கை முடிக்க வேண்டும் சரியாக தமிழ் புத்தாண்டன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினருக்கு கண்டிஷன் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழ் புத்தாண்டன்று வலிமை திரைப்படம் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.