Ajith New Look : தல 59 படத்திற்காக ஹாலிவுட் நடிகரின் லுக்கிற்கு மாறியுள்ளார் தல அஜித். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய வெற்றி படங்களை கொடுத்த எச். வினோத் இப்படத்தை இயக்க ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகளும் ஹைதராபாத்தில் படு ஜோராக நடந்து வருகிறது. தல அஜித்தும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற போது ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே ஹாலிவுட் நடிகர் Hugh Jackman அவர்களை போலவே இருப்பதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.

Ajith Hollywood Look

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.