மீண்டும் அளப்பறைக்கு தயாராகும் அஜித் - செம மாஸ் தகவல் இதோ! | Valimai | THala Ajith

Ajith in Viswasam Movie Re-Release : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன.

இந்த வைரஸ் தொற்று இந்தியாவின் அதிதீவிரமாக பரவியதால் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருந்தது. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Ajith Injured in Valimai Shooting Spot

இப்படியான நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த தீபாவளி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகளில் பழையபடி மக்களின் கூட்டத்தை ஒன்று சேர்க்க அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

அப்படித்தான் பிரபல திரையரங்கான கங்கா சினிமாஸ் நிறுவனம் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.