Ajith in Virumandi Movie

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் தல அஜித் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்த உண்மை என்ன என்பதைப் பார்க்கலாம்.

Ajith in Virumandi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று விருமாண்டி.

இந்த படம் இன்று வரை ரசிகர்கள் ரசிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் தல அஜித் நடித்து இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்களும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் விருமாண்டி படத்தில் அஜித் எந்த ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை. அவர் விருமாண்டி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

அஜித்தும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.