Ajith in Valimai Movie Update
Ajith in Valimai Movie Update

தல அஜித்துக்கு தம்பியாக இளம் நடிகர் ஒருவர் வழி திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith in Valimai Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழு அப்டேட்டை கொடுக்கப் போவதில்லை என்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றனர். இதுவரை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட ரிலீஸ் செய்யாதது தயாரிப்பாளர்கள் மீது அஜித் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இப்படியான நிலையில் தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் தல அஜித்திற்கு தம்பியாக இளம் நடிகரான ராஜ் ஐயப்பா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜப்பா தல அஜித்தின் நண்பரும் நடிகருமான பானு பிரகாஷின் மகன் என்பதால் அவரை சிறு வயதில் இருந்தே தெரியும். நட்பின் காரணமாக ராஜ் ஐயப்பாவிற்கு இந்த வாய்ப்பை அஜித் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அஜித்துக்கு வில்லனாக RX100 படத்தின் ஹீரோவான கார்த்திகேயா நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.