Ajith in Valimai Making Secrets
Ajith in Valimai Making Secrets

தனது உயிரை பணையம் வைத்து நடிக்கும் வலிமை படக்காட்சி குறித்த ரகசியங்கள் வெளியாகியுள்ளன.

Ajith in Valimai Making Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமா இதுவரை எவ்வளவு போலீஸ் கதைகளை பார்த்து இருந்தாலும் அத்தனை கதைகளுக்கும் இது ஒரு மைல்கல்லாக அமையும் என வினோத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து யாருடன் கூட்டணி?? அஜித்தின் அடுத்த நான்கு படங்கள் குறித்து வெளியான மாஸ் தகவல்!

இவர் இயக்கிய மாபெரும் ஹிட்டடித்த போலீஸ் கதையான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பயன்படுத்தாத விஷயங்களை இந்த படத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் செட் போட்டு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதனை திலிப் சுப்புராயன் மாஸ்டர் இயக்கியுள்ளார்.

பொதுவாக அஜித் ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல எண்ணுவார். இந்த படத்திலும் அப்படித்தான் வினோத்தும் திலிப் சுப்புராயன் மாஸ்டரும் எவ்வளவு கெஞ்சியும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன்னுடைய உயிரை பணயம் வைத்து ரிஸ்கான காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.

அந்த கார் சேசிங் சீன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீட்டின் நுனியில் அமர வைக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த போலீஸ் கதை அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும் என கூறுகின்றனர்.

மேலும் வலிமை படத்தின் ஒன் லைன் ஸ்டோரி வினோத் நேர்கொண்டபார்வை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போதே கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு செய்த பிறகு இந்த படத்தின் கதையில் பரபரப்பாக அமர்ந்துள்ளார் வினோத்.

யாரும் எதிர்பார்க்காத இயக்குனருடன் சியான் 60 படம்.! – வெளியான மாஸ் அப்டேட்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போல பல நுணுக்கங்களும் சுவாரஸ்யங்களும் இந்தப்படத்தில் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என உறுதி அளிக்கின்றனர் படக்குழுவினர்.

இதனால் வலிமை நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு வெறித்தனமாக விருந்தாக இருக்கும் என நம்பலாம்.