Ajith in Valimai Latest Stills

வலிமை படத்திலிருந்து தல அஜித்தின் 2 புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Ajith in Valimai Latest Stills : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தத் திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார். இன்னும் பல நடிகர்கள் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்திலிருந்து இரண்டு புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படங்கள் இரண்டும் எச் வினோத் பெயரில் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இது போலி கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

போலி கணக்காக இருந்தாலும் அஜித்தின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் இதனை அதிக அளவில் செய்து வருகின்றனர்.