Ajith in Emotional Interview Video

உடல் எடை கூடியது குறித்து தல அஜித்தும் அவருடன் நடித்த நடிகர்களும் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith in Emotional Interview Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் அப்டேட் எதையுமே வெளியிடாமல் படக்குழு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

Popcorn box; Disposable cup for beverages with straw, film strip, ticket and clapper board. Detailed vector illustration. EPS10 file.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் தல அஜித் திரையுலகில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தான் குண்டாகி விட்டதாக கிண்டல் அடிக்கிறார்கள் என வருத்தப்பட்ட காட்சியும் அஜித் படப்பிடிப்பில் உடல் வலியால் எவ்வளவு கஷ்டப்படுவார் என்பது குறித்து பேசிய காட்சிகளையும் வைத்து வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது. இதோ பாருங்க

https://twitter.com/ThangamV19/status/1342131388204511232?s=19