Ajith in Dubbed Movies Record in Hindi

ஹாலிவுட்டில் அஜித்தின் படங்களுக்கு மவுசு கூடி வருவதால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

Ajith in Dubbed Movies Record in Hindi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் இவர் பாலிவுட்டில் அசோகா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இதனால் பாலிவுட்டில் அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது. இதனால் அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டன.

இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் அஜித்தின் பழைய படங்களை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அஜித்தின் பில்லா, வீரம், வேதாளம், என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.