Ajith Helps to School Boy in Varanasi

தல அஜித் தன்னுடைய நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவர் செய்த உதவி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Ajith Helps to School Boy in Varanasi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தல அஜித்திற்கு பொதுவாகவே பைக்கில் பயணம் செய்வது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இவர் உடல்நிலை காரணமாக நீண்ட நாட்களாக பைக்கில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தார்.

இப்படியான நிலையில் தல அஜித் தன்னுடைய நண்பர்களுடன் சிக்கிமிற்கு பைக்கில் பயணம் செய்துள்ளார்.

அப்போது வாரணாசியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்தி உள்ளார். அந்த ஹோட்டலில் சிறுவன் ஒருவன் பள்ளிச்சீருடையில் பணிபுரிந்ததை பார்த்துள்ளார்

அந்த சிறுவன் அந்த ஹோட்டல் முதலாளியின் மகன் தான் என்பதை தெரிந்து கொண்டுள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் ஹோட்டல் மூடப்பட்டிருந்ததால் பள்ளி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மகன் உடன் பணிபுரிகிறான் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து தல அஜித் அந்தச் சிறுவனின் கல்வி கட்டணம் முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தல அஜித் செய்த உதவி சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.