Ajith Friend Best Bayilvan Ranganathan
Ajith Friend Best Bayilvan Ranganathan

அஜித் பெயரை கெடுக்காதீங்க என பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோவிற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அலிஷா அப்துல்லா.

Ajith Friend Best Bayilvan Ranganathan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். நடிப்பைத் தாண்டி பைக் ரேஸ் கார் ரேஸ் உள்ளிட்டவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இவருடன் பைக் ரேஸில் கலந்துகொண்டவர் அலிஷா அப்துல்லா. இவருக்கும் அஜித்துக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அஜித்துடன் ரேஸில் கலந்து கொண்ட அனுபவங்களை பதிவு செய்துள்ளார். தற்போது இவரை மத்திய அரசு தேசிய மனித உரிமைகள் மற்றும் ஊழல் தடுப்பின் தமிழக தலைவராக அமைத்துள்ளது. இதுகுறித்து அலிஷா அப்துல்லாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Mahabharatham Special : மகாபாரதத்திற்கு பிறகு இன்றும் உயிருடன் இருக்கும் ஐந்து நபர்கள் – அவர்கள் யார் யார் தெரியுமா?

இதனையடுத்து பத்திரிக்கையாளரும் சினிமா நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அலிசா அப்துல்லா இந்த பதவி கிடைத்ததும் மத்திய அரசுக்கு கூட நன்றி சொல்லாமல் நேராக அஜித்தின் வீட்டுக்குச் சென்று அவரின் காலில் விழுந்து இது எல்லாம் உங்களால் தான் நடந்தது என நன்றி கூறியதாக பேசியிருந்தார்.

இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அலிஷா அப்துல்லா தயவுசெய்து இப்படி குப்பை மாதிரி பேசாதீர்கள். இப்படி எல்லாம் எப்படி பேச முடிகிறது. அஜித்தின் பெயரை கெடுக்காதீர்கள்.

என்னையும் அஜித்தையும் இணைத்து கிசுகிசுக்களை வெளியிடுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.

இதே பயில்வான் ரங்கநாதன் தான் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது மாப்பிள்ளை இவர் தான் என ஒரு சில தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் அது முற்றிலும் வதந்தி என கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் தற்போது இவ்வாறு தவறான தகவல்களை வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.