Ajith fans question to CM

‘வலிமை அப்டேட்’ குறித்து முதல்வரிடம் கேட்ட தல ரசிகர்கள்!!

Ajith fans question to CM: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் வலிமை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். இதனால் போனி கபூர் மற்றும் வினோத் ஆகிய இருவர் மீதும் தல ரசிகர்கள் கோபத்தையும், கண்டனங்களையும், வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதல்வரிடம் தல ரசிகர்கள் ‘வலிமை அப்டேட்’ எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.