Ajith Fans Comments on Maanaadu Update

வெங்கட் பிரபுவிடம் தல அஜித் ரசிகர் ஒருவர் கேட்பதில் லாஜிக் இல்லாத தான் இருந்தாலும் கேட்கிறேன் என வலிமை பட அப்டேட்டை கேட்டுள்ளார்.

Ajith Fans Comments on Maanaadu Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித் பேன்ஸ் நிலைமை இப்படியா ஆகணும்?? வெங்கட் பிரபுவிடம் வலிமை அப்டேட் கேட்டு கெஞ்சும் அஜித் ரசிகர்கள் -சிம்பு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க.!!. இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க கேட்ச் வினோத் இயக்கி வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் படக்குழு வலிமை படம் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. படத்தின் டைட்டில் இதுதான் என அறிவிப்பு வெளியானதை தவிர படக்குழு தரப்பில் இருந்து வலிமை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

தல அஜித் ரசிகர்களின் தொடர்ந்து படக்குழுவினரிடம் வழிபட அப்டேட் கொடுக்குமாறு கேட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு மனம் இறங்கியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிம்பு மற்றும் ஆகாஷ் தான் எடுத்துக் கொண்ட மாநாடு சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் கமெண்ட் பகுதிகளில் அஜித் ரசிகர் ஒருவர் உங்களிடம் கேட்பது லாஜிக் இல்லை தான் ஆனால் அந்த வலிமை அப்டேட் எப்போது வரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜித் ரசிகரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட சிம்பு ரசிகர் ஒருவர் விரைவில் நல்ல செய்தி வரும் நண்பா என பதிலளித்துள்ளார்.