Ajith and Drag Politics
அஜித்தையும் இழுத்து போட்ட அரசியல் – இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.!
இதுவரை அரசியலுக்கும் அரசியல் படங்களுக்கும் நோ சொல்லி வந்த அஜித்தையும் பாழா போன அரசியல் விட்டு வைக்கவில்லை.
என்ன அஜித் அரசியலுக்கு வருகிறாரா? என ஷாக்காக வேண்டாம். அஜித்தின் அடுத்த படம் பக்கா அரசியல் படமாக உருவாக உள்ளதாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தான் ரீமேக் படமாம். மீண்டும் அஜித் வினோத் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாக உள்ளதாம்.
இப்படத்தை போனி கபூர் அல்லது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.