Ajith Clarification on Mohanlal Direction Movie

அஜித்தின் அடுத்த படம் பற்றி தல அஜித் தரப்பில் இருந்து வெளியேறும் தகவல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

Ajith Clarification on Mohanlal Direction Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க மலையாள சினிமாவில் மோகன்லால் இயக்கும் படத்தில் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அஜித் அப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று அஜித் தரப்பில் விசாரித்தபோது அது முற்றிலும் வதந்தி. மோகன்லால் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஜித் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை, ரசிகர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.

இதனால் மோகன்லால் இயக்கத்தில் தல அஜித்தை பார்க்கலாம் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.