Ajith and Shalini in Raja Rani Gettup

தல அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் ராஜா ராணி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Ajith and Shalini in Raja Rani Gettup : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

தன்னுடைய கடுமையான உழைப்பால் பல்வேறு தடைகளை தாண்டி உச்சத்தை அடைந்துள்ள அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜித்தை பற்றி மட்டும் இல்லாமல் அஜித் குடும்பத்தை பற்றி எந்த ஒரு தகவல் வெளியானாலும் சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறிவிடுகிறது.

அந்த வகையில் தற்போது தல அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி ஆகியோர் ராஜா ராணி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அஜித் ரசிகர்களும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
2 Attachments