Ajith

வலிமை படத்தில் நானும் நடிக்கிறேன் என சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

Ajith Advice to Yogi Babu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச் வினோத் மீண்டும் அஜித்துடன் கூட்டணி சேர்ந்து இந்த படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனிகபூர் படத்தினைப் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு தானும் வலிமை படத்தில் நடித்து வருவதாக கூறி உள்ளார்.

இதற்கு முன்னதாக அஜித்துடன் வேதாளம் விசுவாசம் படங்களில் நடித்து வந்தபோது திருமணம் செய்துகொள் என கூறிக் கொண்டே இருப்பார். தற்போது திருமணம் முடிந்த பிறகு வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னைப் பார்த்ததும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்ததோடு குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க மறந்து விடாதே. குடும்பம் தான் முக்கியம் என அறிவுரை வழங்கினார் என்று கூறியுள்ளார். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.