Ajith About Valimai Update

வலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு தேதியோடு அப்டேட் கொடுத்துள்ளார் தல அஜித். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Ajith About Valimai Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார்.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதுவரை படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அஜித்தை ஹைதராபாத்தில் பார்த்த ரசிகர்கள் எப்போது அப்டேட் வரும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அஜித் இந்த பிப்ரவரி மாத இறுதியில் வலிமை அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் பிப்ரவரிக்கு பிறகு வலிமை அப்டேட் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார்.