Ajith About His Carrier and Future Plan

வலிமை படத்திற்கு பிறகு தல அஜித் நடிப்பதை நிறுத்த போவதாக தகவல் பரவி வருகிறது.

Ajith About His Carrier and Future Plan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருட சம்மரில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு அஜித் நடிப்பதை நிறுத்தி கொள்ள போவதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது அஜித் நான் வெறும் நடிகனாக மட்டுமில்லாமல் பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பலவற்றில் சாதிக்க விரும்புகிறேன்.

ரசிகர்களுக்காக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தீபாவளி, பொங்கல் என வருடந்தோறும் படங்களை கொடுப்பது மட்டுமே வேலை என்பதில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் அஜித் தொடர்ந்து நடிக்க மாட்டார் என தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது வெறும் வதந்தி தான், அஜித் தொடர்ந்து நடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.