Thala 60 Heroine
தல 60 படத்தின் நாயகியாக நடிப்பதற்காக பிரபல தமிழ் நடிகையுடன் ரகசிய சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தல 60 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

பிரெஷ் ஸ்க்ரிப்ட் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் எல்லையில்லா எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படத்திற்கு வலிமை என டைட்டில் வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக நாம் ஏற்கனவே கூறி இருந்தோம்.

இந்த தகவலை தொடர்ந்து இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கான பேச்சு வார்த்தைக்காக கீர்த்தி சுரேஷ் போனி கபூர் அலுவலகத்திற்கு சென்றிருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் இன்று கீர்த்தியின் பிறந்தநாள் என்பதால் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கண் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதால் அந்த படத்திற்கான சந்திப்பாக இது இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்தால் எது உண்மை என தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.