Thalapathy Vijay And Aishwarya Rajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பது பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார்.

இதனால் விஜய் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என பேட்டி ஒன்றில் கேட்டுள்ளனர்.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய்க்கு தங்கையாக நடிக்க மாட்டேன், அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.