Aishwarya Rajesh
Aishwarya Rajesh

இந்தி தெரியாது போடா டீசர்ட் அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Controversy Video : யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சிரிஷ் ஆகியோர் இந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்த டீ சர்ட் அணிந்து புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இதனால் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து பரபரப்பாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷிம் சகோதரனுடன் ஹிந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்டை அணிந்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு இந்தி தெரியும் என சில வசனங்களை இந்தியில் பேசிய வீடியோவை வெளியிட்டு அப்போ இதுக்கு பேர் என்ன என அவரை வச்சி செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ வெளியான உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ட்வீட்டை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.