Aishwarya Rajesh About Pushpa Movie

அவருக்கு தங்கச்சியாக நடிக்கல என பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh About Pushpa Movie : தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அறிமுகப் படத்திலேயே மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் இவர் நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து அசத்தி இருந்தார். இதனால் இதற்கு தொடர்ந்து பல படங்களில் பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கிறார் என தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நான் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தங்கையாக நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தது போதும்.. தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிக்க துவங்கி விட்டால் தன்னுடைய மார்க்கெட் சரிந்து விடும் என்ற பயத்தினால் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படியான முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.