AIADMK CM Candidate

முதல்வர் வேட்பாளரை அதிமுக தான் தேர்ந்தெடுக்கும் என பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.

AIADMK CM Candidate : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது அதிமுக.

வரும் மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதிமுகவும் பழைய கூட்டணியுடன் இம்முறையும் தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்துள்ளது. மேலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் தமிழக பாஜகவினர் முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் என கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பெரும்பான்மை கட்சி அதிமுக தான் என்பதால் முதல்வர் வேட்பாளரை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

இது அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியாக்கி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.