அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அதிரடியான இரண்டு அறிவிப்புகள் குடும்பத் தலைவிகளுக்காக இடம் பெற்றுள்ளன.

AIADMK Announcement to Women’s : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கைகளை வெளியிட தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆக இரண்டு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதாவது மகளிருக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1500 வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.