விட்டதைப் பிடிக்க அதே கூட்டணியுடன் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

AGS Next Movie With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் வெளியாக வினியோகிஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை என கூறப்பட்டது.

இதனால் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படத்தினை தயாரித்து விட்டதை பிடிக்க ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அட்லி விஜயிடம் ஒன்லைன் ஸ்டோரியை கூறி இருப்பதாகவும் அதற்கு விஜயும் ஓகே சொல்லி இருப்பதாகவும் இன்னொரு தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.