Agni Natchathiram Movie Details
Agni Natchathiram Movie Details

இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் இதே பெயரில் தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Agni Natchathiram Movie Details : உதயா மற்றும் விதார்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படமான அக்னி நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் டைட்டிலை மட்டும் வைத்துக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு விஜயை போலவே மரண மாஸ் ஆட்டம் போட்ட அனிருத் – இணையத்தில் வைரலாகும் வீடியோ ‌

படக்குழுவினர் இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் சென்னை, வேலூர், ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் படமாக்கி உள்ளனர். இந்தப் படத்தை மோகன் ராஜா மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோரிடம் பணிபுரிந்த ஷரண் இயக்கியுள்ளார். எல் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராகவேந்திர பிரசாத் இசையமைத்துள்ளார். பா விஜய் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார். நடிகர் விவேக் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ம்ரிதி வெங்கட் மற்றும் ஸ்ரீ பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

ஜேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கரிஷ்மெட்டிக்ஸ் கிரியேஷன் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்னும் பத்தே நாட்கள் தான் ஷூட்டிங் உள்ளது. இந்த பத்து நாள் ஷூட்டிங்கை ஏலகிரியில் எடுக்க திட்டமிட்டு இருந்த போது லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இயல்புநிலை திரும்பியதும் இந்த பத்து நாள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரும். இதுவரை நடந்து முடிந்த படப்பிடிப்பு காட்சிகள் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் நிச்சயம் இது தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது இருக்கும் கடுமையான சூழலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக அனைத்தையும் கடந்து வரவேண்டும். மீண்டும் தமிழ் சினிமா பழையபடி புத்துயிர் பெற்று நல்ல படங்கள் உருவாக வேண்டும். அதுவே தற்போது எங்களுடைய விருப்பம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.