YouTube video

சட்டமன்ற தேர்தலுக்காக அஇஅதிமுக சார்பில் 11 பேர் கொண்ட அறிக்கை தயாரிப்பு குழுவும் , 3 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவும் ,ஊடக சந்திப்புகளுக்கு 7 பேர் கொண்ட குழுவும், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்க 9 பேர் கொண்ட குழுவும், 3 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழுவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. 11 பேர் கொண்ட அறிக்கை குழு உட்பட 5 தேர்தல் குழுக்களை உருவாக்கியுள்ளது. அ.இ.அ.தி.மு.க. தன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களையும் சேர்த்து 11 பேர் கொண்ட அறிக்கை குழுவை கட்டமைத்துள்ளது.இதை தவிர்த்து, எதிர்க்கட்சியின் புகார்களுக்கு பதிலளிக்கவும், ஊடக ஒருங்கிணைப்பிற்கும் தனித்தனி குழுக்களை உருவாக்கியுள்ளது.

தேர்தல் சம்பத்தப்பட்ட பணிகளுக்காக அனைத்து தொகுதிகளையும் 30 மண்டலங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்களையும், அமைச்சர்களையும் அ.இ.அ.தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயல் ஆற்றி வருவதால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.