vijay3
தன் படங்களை ஓட வைக்கவே விஜய் இப்படி பேசி வருகிறார் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ADMK Attack on vijay for talk in bigil audio launch – நேற்று நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ‘என் பேனர்களை கிழியுங்கள். கட் அவுட்டுகளை உடையுங்கள்.

ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்’ எனப்பேசினார். சர்கார் படம் வெளியான போது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அவரின் பேனரை அதிமுகவினர் கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டதை மனதில் வைத்தே விஜய் பேசினார்.

அதேபோல், சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீது, பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என அதிமுக அரசை மறைமுகமாக சாடினார்.

அதாவது, பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை என்பதை மனதில் வைத்தே விஜய் பேசியதாக தெரிகிறது.

பேனர் வைக்க லஞ்சம் கொடுத்த ஜெயகோபால்? – லீக் ஆன ஆடியோ

அதேபோல், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமியின் அரசையே விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

vaigai selvan

இந்நிலையில், விஜயின் பேச்சு பற்றி கருத்துதெரிவித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ‘ கதையே இல்லாமல் தான் நடிக்கும் படத்தை ஓட வைக்கவே நடிகர்கள் தற்போது இப்படி பேசி வருகிறார்.

ஆளும் கட்சிக்கு எதிராக இப்படி ஒரு பரபரப்பான கருத்தை தெரிவித்து தனது படத்தை 2 மாதங்கள் ஓட்டவே இப்படி பேசி வருகிறார்கள்.

ஜெயஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறது. யாரை எங்கே அமர வைக்க வேண்டுமோ அதை தெரிந்தே மக்கள் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளது’ என அவர் தெரிவித்தார்.