YouTube video

ADMK and EPS Achievements : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.

எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெயரை சொல்லும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என திமுக இரண்டு முறை போராட்டம் நடத்தியும் பப்பு வேகவில்லை. ஆனால் தமிழக முதல்வர் பழனிசாமி நாங்கள் பாஜகவின் கைப்பாவை அல்ல என்பதைக் கூறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ஆளுநரின் ஒப்புதல் இன்றி வெளியிட்டார்.

EPS Political Life History

அதன்பின் தான் ஆளுநரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஆளுநர் அதிமுக மீது கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காக அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆளுநரைச் சந்தித்தார். இது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சாணக்கிய தனத்தை காட்டுகிறது என பலரும் கூறுகின்றனர்.

அதேபோல் எதிர்க்கட்சியினர் நாளுக்கு ஒரு அறிக்கை, சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து அதிமுக மீது குற்றம் சாட்டி கொண்டே இருந்தால் ஆட்சி அரியணையில் ஏற்றி விடலாம் என பகல் கனவு காண்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடிக்கிறார்கள்.

சென்னையின் மேயராக இருந்த போது ஸ்டாலினிடம் இருந்த வேகம் கூட தற்போது இல்லை என கூறுகின்றனர். இதனால் ஸ்டாலினின் நிலை அரசியலில் நாளுக்கு நாள் சறுக்கிக் கொண்டே வருகிறது.

அதேபோல் அதிமுகவிலும் வாரிசுகள் இருக்கிறார்கள். ஆனாலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் எந்த ஒரு இடத்திலும் தன் மகனை முன்னிறுத்துவது இல்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தன் மகனை அரசியலில் எந்த இடத்திலும் முன்னிறுத்தியது இல்லை. அது தான் சரி என எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகளே பாராட்டுகின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சி குடும்ப உறுப்பினருக்கே உயரிய பதவியை கொடுக்க கூடாது என பல வேலைகள் நடக்கின்றன. குடும்பத்திற்கு உள்ளாகவே குடும்ப அரசியல் நடப்பது தான் எதிர்க்கட்சியின் சறுக்கத்திற்கு பெரிய காரணம் ‌என அரசியல் ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.

எப்போது என்ன செய்ய வேண்டும் என அதிமுக அரசு ஆலோசித்து சிறப்பாக செய்து வருவதால் அடுத்த முறை அதிமுக ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.