Adithya Tv Anchor Thapa Marriage
Adithya Tv Anchor Thapa Marriage

பிரபல தொகுப்பாளியும் நடிகையுமான தாப்பாவுக்கு திடீர் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மணக்கோல புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Adithya Tv Anchor Thapa Marriage : ஆதித்யா தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக வலம் வருபவர் தாப்பா. நேபாள குடும்பத்தை சேர்ந்த பெண் என்றாலும் தமிழை சரளமாக பேசி ரசிகர்களை கவர்ந்தார்.

இதுவரை எந்தவொரு பேட்டியிலும் திருமணம் குறித்து வாய் திறக்காத தாப்பாவிற்கு இரு வீட்டார் சம்பத்துடன் திரையுலக கலைஞருடன் திருமணம் நடந்தேறியுள்ளது.

முன்னணி நடிகரை மணக்கும் டாப்ஸீ, அவரே வெளியிட்ட தகவல் – யார் அந்த ஹீரோ தெரியுமா?

பிருந்தா மாஸ்டர், பாபா மாஸ்டர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ரகு என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் கோவிலுள் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டுள்ளார் தாப்பா.

மேலும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புரசைவாக்கத்தில் நடைபெற இருப்பதாகவும் இதில் திரையுலக பிரபலங்களும் தொலைக்காட்சி நண்பர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாப்பா தொகுப்பாளியாக மட்டுமில்லாமல் தல அஜித் நடித்திருந்த விசுவாசம், வேதாளம் என இரண்டு படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adithya Tv Anchor Thapa Marriage
Adithya Tv Anchor Thapa Marriage