Adangamaru Release Date : ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அடங்கமறு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அடங்கமறு. ஜெயம் ரவி நாயகனாக நடிக்க ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் படத்தை டிசம்பர் 21-ம் தேதி வெளியிட அனுமதி கேட்டு இருந்தீர்கள்.
அதன்படியே படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் அடங்கமறு படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை மகிழ்ச்சியா கழிக்க ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை குழு என்பதும் குறிப்பிடத்தக்கது.
To all my fans ❤️ Get ready for #AdangamaruFromDec21 worldwide release & also happy to share #AdangamaruCensoredUA ????
Thanks to @TFPCTN ????????@dirkarthi @raashikhanna @theHMMofficial @anandjoy006 @sujataa_HMM @SamCSmusic @sathyaDP @AntonyLRuben @shiyamjack @ClapBoardPr pic.twitter.com/NsX76Wrmkj— Jayam Ravi (@actor_jayamravi) November 17, 2018