Actress Vidhulekha Raman Photos

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் வெளியிட்டுள்ளார் வித்யூலேகா.

Actress Vidhulekha Raman Photos : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வித்யூலேகா. இவர் முதலில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்துள்ளார்.

தல அஜித்தின் வீரம் மற்றும் தளபதி விஜயின் ஜில்லா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்து உள்ளார்.

உடல் எடை கூடி குண்டாக இருந்ததால் பலரும் கேலி செய்து வருவதாக கூறப்பட்டு வந்த வித்யூலேகா தற்போது கிடுகிடுவென உடல் எடையை 25 கிலோ குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.